பாடசாலை மாணவர்களுக்கான கோவிட் தடுப்பூசி வழங்கல், குழந்தை மருத்துவர்களின் நேரடி மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று தெரிவித்துள்ளது.
சங்கத்தின் பொதுச் செயலாளர் நலிந்த ஹேரத் ஊடகங்களிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்குத் தடுப்பூசி வழங்குவது குறித்த குழுவின் முடிவு இந்த வாரம் அறிவிக்கப்படவுள்ள நிலையிலேயே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
பாடசாலை மாணவர்களுக்கான கோவிட் தடுப்பூசிகளை வழங்குவது தொடர்பான பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கக் குழு நியமிக்கப்பட்டது.
சுகாதார அதிகாரிகளுடன் நீண்ட கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த குழுவுக்குச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தலைமை தாங்குகிறார்.
12 முதல் 19 வயதிற்குப்பட்டவர்களுக்குத் தடுப்பூசி போடுவதற்கான முக்கியமான காரணியாக, குழுவின் பரிந்துரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதேவேளை நாடு முழுவதும் ஒரே நேரத்தில் இந்த தடுப்பூசிகளைப் போடும் திறன் நமது சுகாதார அமைப்புக்கு உள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.