தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசாங்கத்திடம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒமல்பே சோபித தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டின் அனைத்து பெற்றோர்களின் சார்பில் தாம் இந்தக் கோரிக்கையை முன்வைப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஆசிரியர்களும் அரசாங்கமும் தயவு செய்து ஓர் இணக்கப்பாட்டை எட்டுவதற்கு முயற்சிக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
அதிபர், ஆசிரியர்கள் நிதி அமைச்சரை சந்திப்பதற்கு இரண்டு வாரங்களாக முயற்சித்த போதிலும் அதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று ஆசிரிய தொழிலில் ஈடுபடுவோரில் 80 வீதமானவர்கள் பெண்கள். குறைந்தளவான ஆண்களே தொழிலில் ஈடுபடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரிய தொழில் இரண்டாம், மூன்றாம் தர தொழிலாகவே சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சரவை உப குழுவினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ள 33 வீத கொடுப்பனவிற்கு இணங்க வேண்டுமெனவும், அமைச்சரவை இந்த விடயத்தில் எடுத்த தீர்மானம் பிழையானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆசிரியர்களின் கோரிக்கைகைளை அமைச்சரவை மலினப்படுத்தக் கூடாது என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.