நாடு மிகவும் மோசமான நிலைமையில் பயணித்துக் கொண்டிருப்பதாக லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரன தெரிவித்துள்ளார்.
அவசரககால சட்டத்தை அமுல்படுத்தி அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதற்கான நடவடிக்கையை உரிய முறையில் முன்னெடுக்கப்பட்டால் அதில் சில நிவாரணங்கள் கிடைக்கும்.
மறுபுறம் பார்த்தால் இந்த அதிகபட்ச வரி சுமையை, வசதியானவர்களின் கூட தாங்கிகொள்ள முடியாத நிலைமையே காணப்படுகின்றது. அரசாங்க திணைக்களங்களின் செலவினங்களைக் குறைப்பதால் திட்டங்கள் இடைநிறுத்தப்படும், திட்டங்கள் நிறுத்தப்படுவதால் மக்கள் வேலை வாய்ப்புகளை இழக்கும் நிலைமை ஏற்படும்.
இவ்வாறான சூழ்நிலையில் அரசாங்க திணைக்களங்களின் செலவுகளைக் குறைக்கும்படி பல தரப்பினரால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன. இந்த நிலையில் செலவுகளை குறைப்பதற்காக திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.
அதனூடாக மக்களுக்கு கிடைக்கும் வேலை வாய்ப்புகள் இல்லாம் போயுள்ளது. எனவே நாடு இவ்வளவு மோசமான நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.