பாம்பு போன்ற நீண்ட வடிவில் இருக்கும் படகில் ஏறி நின்று நடிகை நிமிஷா புகைப்படம் எடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
கேரளாவில் உள்ள பல கோவில்களுக்கு சொந்தமாக நீண்ட பாம்பு வடிவிலான படகுகள் உள்ளன. இந்த படகுகளை கேரள மக்கள் புனிதமாக கருதுகின்றனர். இவற்றை பூஜை செய்த பிறகே விழாக்களுக்கு பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் பிரபல மலையாள நடிகை நிமிஷா பிஜோ, ஜீன்ஸ் பேண்ட் அணிந்து பம்பை ஆற்றில் சாமி ஊர்வலத்தின்போது பயன்படுத்தப்படும் அரன்முலா கோவிலுக்கு சொந்தமான, பாம்பு போன்ற நீண்ட வடிவில் இருக்கும் படகில் ஏறி நின்று புகைப்படம் எடுத்துள்ளார்.
அப்போது காலில் அவர் செருப்பும் அணிந்து இருந்தார். இந்த புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. நிமிஷாவை பலரும் கண்டித்தனர். கேரள தேவஸ்தானம் சார்பில், நிமிஷா மீது நடவடிக்கை எடுக்க போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து நிமிஷாவை போலீசார் கைது செய்தனர். நிமிஷா கூறும்போது, “இந்த படகு புனிதமானது என்று எனக்கு தெரியாது. கேள்விப்பட்டதும் இல்லை. தெரியாமல் இந்த தவறை செய்து விட்டேன்” என்றார்.