நடிகையிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி ரூ.7 லட்சம் மற்றும் நகைகளை பறித்து சென்றுள்ள நிலையில், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
பிரபல பாலிவுட் நடிகை நிகிதா ராவலிடம் துப்பாக்கி முனையில் பணம் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகை நிகிதா ராவல், டெல்லி சாஸ்திரி நகரில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வந்துள்ளார். அவர் படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பியபோது காரில் வந்த முகமூடி கொள்ளையர்கள் அவரை வழிமறித்துள்ளனர்.
இதையடுத்து துப்பாக்கியை காட்டி மிரட்டிய கொள்ளையர்கள், நடிகை நிகிதாவிடம் இருந்து ரூ.7 லட்சம் மற்றும் நகைகளை பறித்து சென்றுள்ளனர். பணத்தை இழந்த நடிகை நிகிதா ராவல், பயந்து வீட்டுக்குள் ஓடிச்சென்று பீரோவில் ஒளிந்துகொண்டாராம்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து நடிகை நிகிதா ராவல் கூறும்போது, “இந்த அதிர்ச்சியில் இருந்து என்னால் வெளியே வரமுடியவில்லை. நான் உயிரோடு இருப்பதையும் நம்ப முடியவில்லை” என்றார்.



















