கட்டுநாயக்க விமான நிலையத்தில் தாக்குதல் மேற்கொள்ளப் போவதாக விமான நிலையத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு மின்னஞ்சல் ஒன்று கிடைத்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த மின்னஞ்சல் கிடைத்தவுடன் விமான நிலையத்தின் பாதுகாப்பினை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 20ஆம் திகதி விமான நிலையத்திற்கும் அரச கட்டடம் ஒன்றிற்கும் தாக்குதல் மேற்கொள்வதாகவும், தாம் பெயரிடும் நால்வரை உடனடியாக விடுக்குமாறும் அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது.



















