இந்தியாவில் உள்ள மாநிலம் ஒன்றில் ஒரே நேரத்தில் இரு ஆண்களை காதலித்து கர்ப்பமான யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் ஷிமோகா மாவட்டம் கும்சி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் அஷ்வினி (20). இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில், அஷ்வினி தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் பசவராஜ் என்பவரை காதலித்து வந்துள்ளார். அதே நேரம் கும்சி கிராமத்தைச் சேர்ந்த மதுசூதனன் என்று இளைஞரையும் நீண்ட நாட்களாக அஷ்வினி காதலித்து வந்துள்ளார்.
பலமுறை அஷ்வினி இரண்டு காதலர்களுடனும் எல்லை மீறி இருந்து வந்தார். இதன் காரணமாக அஷ்வினி கர்ப்பம் அடைந்துள்ளார்.
இதுகுறித்து அவர் இரண்டு காதலர்களுக்கும் தெரிவித்த போது, கர்ப்பத்துக்கு நாங்கள் காரணமில்லை என்று இரண்டு வாலிபர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அஷ்வினிக்கு திடீர் வயிற்று வலி ஏற்படவே, தாய் அவரை ஷிமோகாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்ததில், அஷ்வினி 7 மாதம் கர்ப்பமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதை கேட்டு தாயார் பேரதிர்ச்சி அடைந்துள்ளார்.
மருத்துவமனையில் அஷ்வினிக்கு பிரசவம் பார்த்ததில் குறை பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது. அடுத்து சில மணி நேரத்தில் அஷ்வினியும் உயிரிழந்துள்ளார்.