நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் துஷான் குணவர்தன தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தனது இராஜினாமா கடிதத்தை இந்த வாரம் துஷான் குணவர்தன, நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்னவிடம் ஒப்படைப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர் அரசியல் அழுத்தங்கள் காரணமாக தன்னால் தனது கடமைகளை சுயாதீனமாக செய்ய இயலாத நிலை காணப்படுவதனால் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக துஷான் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு வெள்ளை பூண்டு கொள்கலன்கள் சட்டவிரோதமாக வெளியேற்றப்பட்டமை உட்பட பல சம்பவங்களின் பின்னணியில் தனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.