இலங்கையில் கொவிட் தொற்றாளர்களுக்கு நாளாந்தம் சிகிச்சையளிப்பதற்காக அரசாங்கம் பாரிய அளவு சுமை ஒன்றை ஏற்க நேரிட்டுள்ளதாக மருந்துகள் உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சின் செயலாளர் வைத்தியர் ரத்நாயக்க (Ratnayake) தெரிவித்துள்ளார்.
அந்த சுமையை குறைத்து கொள்வதற்கு இலங்கையர்கள் உடனடியாக கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கொவிட் தொற்றிற்கு மத்தியில் இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. சாதாரண கொவிட் தொற்றாளர் ஒருவருக்கு தினசரி 1800 முதல் 2000 ரூபாய் வரையிலான பணம் சிகிச்சைக்காக செலவிடப்படுகின்றது.
தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறும் நோயாளி ஒருவருக்கு தினசரி 75000 முதல் 200000 ரூபாய் வரை செலவிடப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஒக்ஸிஜன் உதவியுடன் ஒருவர் சிகிச்சை பெற்றால் இந்த தொகை மேலும் அதிகரிக்கின்றது. ஒரு கொவிட் தொற்றாளரிடம் செல்லும் வைத்தியருக்கு நாள் ஒன்றுக்கு 3 PPE கிட் தேவைப்படுகின்றது. ஒரு PPE கிட்1500 ரூபாய் மூன்றிற்கு 4500 ரூபாய் செலவிடப்படுகின்றது. சாதாரண தொற்றாளரின் செலவுகளுடன் இதனையும் சேர்த்தால் பாரிய பணம் தேவைப்படுகின்றதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.