பிரிட்டனை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன், விபரீத முயற்சியாக அந்தரங்க உறுப்பை எவ்வளவு பெரியது என அளக்க நினைத்துள்ளான். அதற்க்காக, அறையில் இருந்த USB கேபிளை தனது அந்தரங்க பகுதியில் செலுத்தி அளவிட முயன்றுள்ளான்.
ஒரு கட்டத்தில் கேபிளானது சிக்கிக்கொண்டது. உடனே அதனை வெளியே எடுக்க முயன்றுள்ளான். ஆனால் கேபிள் சிக்கிக்கொண்டதால் அந்தரங்கப்பகுதியில் இருந்து ரத்தம் வெளியேறித் தொடங்கியது.
இதனால், வலியில் துடிதுடித்த அந்த சிறுவன் தனது பெற்றோரை அழைத்து தனது விபரீத விளையாட்டு குறித்து கூறியுள்ளார். இதனையடுத்து அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
மருத்துவர்கள் அந்தரங்க பகுதியை ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர். மிகவும் மோசமான நிலையில் இருந்துள்ளது. இதனையடுத்து அவரை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். உள்ளூர் மருத்துவமனையில் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. காரணம் கேபிளில் முடிச்சு இருந்ததால் அவர்களது முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.
இதனையடுத்து அந்த சிறுவன் லண்டன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்தனர். தனது தாயை வெளியில் அனுப்பிவைத்துவிட்டு பரிசோதிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதன்பேரில் அவரது தாய் வெளியில் காக்கவைக்கப்பட்டார்.
மருத்துவர்களின் கேள்விக்கு பதிலளித்த சிறுவன் தன் அந்தரங்க பகுதி எவ்வளவு பெரியது என அறிய விரும்பி இவ்வாறு செய்தேன் எனக் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து, மருத்துவர்களின் பரிசோதனையில் அவர் நல்ல மனதிடத்தோடு இருப்பது தெரியவந்தது.
பாலியல் ஆசையில் இதுபோன்ற விபரீத முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதன் பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு அந்த கேபிளை வெளியில் எடுத்தனர். அந்த இளைஞனுக்கு கேபிளால் உள் காயம் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சை முடிந்து ஒரு நாள் கழித்து அவரை டிஸ்சார்ஜ் செய்துள்ளனர். இரண்டு வாரங்களுக்கு பிறகு ஸ்கேன் செய்து பார்க்கவேண்டும் எனக் கூறியுள்ளனர். மேலும் இதுபோன்ற விபரீத முயற்சிகளில் ஈடுபட வேண்டாம் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.