பிரபல ரிவியில் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி எப்பொழுது ஆரம்பமாகின்றது என்ற ப்ரொமோ காட்சியினை பிரபல ரிவி வெளியிட்டுள்ளது.
பல தொலைக்காட்சிகளில் பல ரியாலிட்டி நிகழ்ச்சி நடந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான எதிர்பார்ப்பு கொஞ்சமும் குறையவில்லை. இந்நிலையில், வரும் அக்டோபர் 3-ம் தேதி மாலை 6 மணிக்கு பிக் பாஸ் சீசன் 5-ன் பிரம்மாண்ட துவக்க நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது என விஜய் டிவி உறுதி செய்திருக்கிறது.
இதனால், பொது மக்கள் தங்களின் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். சென்ற வருடம் போல இந்த ஆண்டும் இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் அனைத்துப் போட்டியாளர்களையும் ஹோட்டலில் தனிமைப்படுத்தியுள்ளனர்.
கூடுதலாக இம்முறை அவர்கள் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி கட்டாயம் போட்டிருக்க வேண்டும் என்கிற விதிமுறையையும் சேர்த்திருக்கின்றனர்.
மேலும், யாரெல்லாம் இந்த போட்டியில் கலந்துகொண்டால் சுவாரசியமாக இருக்கும் என்றும் யாரெல்லாம் நிச்சயம் செல்கிறார்கள் என்கிற தகவல்களையும் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வரிசையில், விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா, நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி, ஷகிலா மகள் மிலா உள்ளிட்ட பலரின் பெயர்கள் தற்போது உத்தேச போட்டியாளர்கள் லிஸ்டில் இருக்கின்றன.