இலங்கையில் நடந்த இறுதிப்போரை மையமாக வைத்து பல படங்கள் தயாராகி வருகின்றன. சமீபத்தில் கூட பேமிலிமேன்-2 என்ற வெப் தொடர் இலங்கை பிரச்சினையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தது.
இதில் சமந்தா இலங்கை தமிழ்ப் பெண்ணாக நடித்திருந்த நிலையில், அந்த தொடரை ஒளிபரப்பு செய்ய எதிர்ப்புகள் எழுந்தபோதும் பேமிலிமேன்-2 வெளியானது.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவரான இலங்கை நடிகை லாஸ்லியாவிடத்தில் இலங்கை தமிழ்ப் பெண்ணான நீங்கள் இலங்கை பிரச்சினையை மையமாக் கொண்ட கதைகளில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறீர்களா? என்று ஒரு பேட்டி ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த லாஸ்லியா,
‛‛அந்த மாதிரி கதைகளில் நடிக்கவே மட்டேன் என்றும் நான் இலங்கையில் வாழ்ந்தவள் என்ற முறையில் அங்கு நடந்த கொடுமையை நேரில் பார்த்திருக்கிறேன். அந்த சம்பவங்களை உயிருள்ள வரை என்னால் மறக்க முடியாது. அதனால் அதுபோன்ற ஒரு கதைகளில் நடிப்பதைகூட எனது மனம் ஏற்றுக்கொள்ளாது என கூறியுள்ளார்.
இதேவேளை ஹர்பஜன்சிங் நடித்த பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நாயகியாக நடித்த லாஸ்லியா, அடுத்தபடியாக ஆரியுடன் ஒரு புதிய படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.