கோவிட் தடுப்பூசியைப் பெறுவதற்கு மக்கள் காட்டும் தயக்கம், சமூகத்தில் வைரஸ் அதிகரிக்கும் அபாயத்தை ஏற்படுத்தும் என அரச மருந்துக் கழகத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேன (Prasanna Gunasena) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தடுப்பூசி மையங்களுக்கு இளைஞர்களின் வருகை தற்போது மிகவும் குறைவாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இளைஞர்களுக்கு நோய் கடுமையாக இருக்காது. ஆனால் அது சமூகத்தில் வைரஸ் சுமைகளைத் தொடரச் செய்யும்.
இந்த சுமைகள் சமூகத்தில் தொடர்ந்தால், அது புதிய மாறுபாடுகளுக்கு வழிவகுக்கும். இது அதிக ஆபத்தை விளைவிக்கும்.
எனவே வைரஸ் சுமைகளைக் குறைக்க தடுப்பூசி போட வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது.
இதன் காரணமாக, தாமதமின்றி தடுப்பூசி பெற இளைஞர்களையும், மற்றவர்களையும் ஊக்குவிப்பது கட்டாயமாகும் என வலியுறுத்தியுள்ளார்.