வழிபாட்டின் உபசாரங்கள் எட்டோ, பதினாறோ எனக்குத்தேவையில்லை. எங்கு முழுமையான பக்தி இருக்கிறதோ அங்கு நான் அமர்கிறேன் என்று பாபாவே சொல்லி இருக்கிறார்.
யார் ஒருவர் இந்த மூல மந்திரத்தை தினமும் 108 தடவை மனதுக்குள் உச்சரிக்கிறார்களோ அவர்களுக்கு பாபாவின் அருள் கடாட்சம் நிரம்பக் கிடைக்கும். இதை சாய்பாபாவே பல தடவை தனது பக்தர்களிடம் சொல்லி இருக்கிறார்.
பாபாவை குருவாக ஏற்று நம்பிக்கை வைத்து அவரை தியானிப்பவர்கள் தினமும் இந்த மந்திரத்தை தவறாமல் சொல்ல வேண்டும். அப்படி மூல மந்திரத்தை சொல்ல சொல்ல அது பாபா காட்டும் பாதைக்கு நம்மையும் அறியாமல் நம்மை அழைத்துச் செல்லும்.
“சாய்…. சாய்… என்று எப்போதும் கூறிக் கொண்டிருப்பீர்களானால் நான் உங்களை ஏழு கடலுக்கு அப்பால் எடுத்துச் செல்வேன். இம்மொழிகளை நம்புங்கள். நீங்கள் நிச்சயம் நன்மை அடைவீர்கள். வழிபாட்டின் உபசாரங்கள் எட்டோ, பதினாறோ எனக்குத்தேவையில்லை. எங்கு முழுமையான பக்தி இருக்கிறதோ அங்கு நான் அமர்கிறேன்” என்று பாபாவே சொல்லி இருக்கிறார்.
தினமும் காலையில் இறைவழிபாடு செய்யும் போது ஒரு 10 நிமிடம் ஒதுக்கி “ஓம் சாய் ஸ்ரீசாய் ஜெய ஜெய சாய்” மூல மந்திரத்தை மனதார சொல்லுங்கள். உங்களது அன்பையும், பக்தியையும் பாபா ஏற்றுக் கொண்டு ஆசீர்வதிப்பார். உங்கள் குடும்பத்துக்கு பாதுகாப்பு கவசமாக இந்த மூல மந்திரம் இருக்கும். இதை பல்வேறு வகைகளில் பாபா தன் பக்தர்களுக்கு உணர்த்தி இருக்கிறார்.