பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் இலியானா, அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகருக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாகார்ஜுனா. இவர் தற்போது கோஸ்ட் என்கிற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். பிரவீன் சட்டாரு இயக்கும் இப்படத்தில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். ஆனால் தற்போது ஹீரோயினை மாற்ற படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏனெனில் நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதால், அவருக்கு பதிலாக பிரபல பாலிவுட் நடிகை இலியானாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. நடிகை இலியானா, நடிகர் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நடிப்பது இதுவே முதன்முறை. நடிகை சமந்தாவின் கணவரும், நடிகருமான நாகசைதன்யாவின் தந்தை தான் நாகார்ஜுனா என்பது குறிப்பிடத்தக்கது.