குரங்கிடம் இருந்து 3 நாட்கள் கழித்து நாய்க்குட்டியை பத்திரமாக மீட்பு குழுவினர் காப்பாற்றியுள்ளனர். மலேசியாவில் உள்ள சிலங்ஹொர் மாகாணத்தில் தமன் லெஸ்டரி புட்ரா என்ற பகுதியில் குரங்குகள் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது.
மேலும் குரங்குகள் அங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் அட்டகாசம் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இரண்டு மாதங்களே நிரம்பிய செல்லப் பிராணியான நாய் குட்டி ஒன்றை கடந்த வியாழக்கிழமை அங்கு சுற்றிக் கொண்டிருந்த குரங்கு ஒன்று தூக்கி சென்றுள்ளது. இதனையடுத்து நாய்க்குட்டியை குரங்கு மரக்கிளையில் வைத்து மறைத்துக் கொண்டது.
மேலும் அது எங்கு செல்லும் போதும் நாய்க்குட்டியை தன்னுடன் எடுத்துச் சென்றுள்ளது. இந்த சம்பவம் குறித்து உள்ளூர் மக்கள் அங்குள்ள மீட்புக் குழுவினருக்கு தகவல் அளித்துள்ளனர். அவர்களும் நாய்க்குட்டியை குரங்கிடம் இருந்து காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் மூன்று நாட்களாக நடைபெற்ற மீட்பு பணி இறுதியில் தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து நாய்க்குட்டி மிகவும் சோர்வடைந்துள்ளது. குறிப்பாக மூன்று நாட்கள் கழித்து தனது கையின் பிடியில் இருந்த நாய் குட்டியை குரங்கு தானே விடுவித்துள்ளது.
மேலும் மரத்தின் கிளையிலிருந்து கீழே விழுந்த நாய்க்குட்டி வந்து பத்திரமாக மீட்பு குழுவினரால் காப்பாற்றபட்டுள்ளது. குறிப்பாக மூன்று நாட்களில் பிடியிலிருந்த நாய்க்குட்டி மிகுந்த சோர்வுடன் காணப்பட்டதால் அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாய்க்குட்டியை தனது குழந்தை என்று எண்ணிக் கொண்டு சென்றிருக்கலாம் என்று விலங்குகள் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.