யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி அறிவிக்கப்பட்ட படி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி நிகழ்நிலை வாயிலாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாக்குழுத் தலைவரும், கலைப்பீடாதிபதியுமான கலாநிதி கே.சுதாகர் இதனைத் தெரிவித்தார்.
பட்டமளிப்பு விழாத் தொடர்பில் தீர்மனங்களை இயற்றுவதற்காக இன்று புதன்கிழமை நண்பகல் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாக்குழுவின் விசேட கூட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்கு விபரிக்கும் போதே கலாநிதி கே. சுதாகரன் இவ்வாறு தெரிவித்தார்.