ரெட்மி பிராண்டின் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் ஆண்ட்ராய்டு டிவி 11 ஓ.எஸ். கொண்டிருக்கின்றன.
ரெட்மி பிராண்டு இந்தியாவில் ரெட்மி ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட் டிவி 32 இன்ச் மற்றும் 43 இன்ச் அளவுகளில் கிடைக்கின்றன. இரு மாடல்களிலும் முறையே ஹெச்டி மற்றும் எப்.ஹெச்.டி. ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளன.
இத்துடன் விவிட் பிக்சர் என்ஜின், ஆண்ட்ராய்டு டிவி 11 ஓ.எஸ்., பில்ட்-இன் குரோம்காஸ்ட், பிளே ஸ்டோர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல்களில் பேட்ச்வால் 4 உள்ளது. இது 30-க்கும் அதிக ஓ.டி.டி. தளங்களில் சர்ச் வசதி, 75-க்கும் அதிக இலவச சேனல்களுடன் அப்கிரேடு செய்யப்பட்டு இருக்கிறது.
இரு மாடல்களிலும் 20 வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ, டி.டி.எஸ். விர்ச்சுவல் எக்ஸ் மற்றும் டி.டி.எஸ். ஹெச்.டி., டால்பி அட்மோஸ் வழங்கப்பட்டுள்ளன. ரெட்மி ஸ்மார்ட் டிவி 32 இன்ச் ஹெச்.டி. மாடல் விலை ரூ. 15,999 என்றும் 43 இன்ச் எப்.ஹெச்.டி. மாடல் விலை ரூ. 25,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.