இலங்கை அரசாங்கத்துடன் கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை கொள்வனவு செய்வதற்கான உடன்படிக்கையில் கையொப்பமிடப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் New Fortress நிறுவனம் அறிவித்துள்ளது.
கொழும்பு துறைமுகத்திற்கு அப்பாலுள்ள கடலில் இயற்கை திரவ வாயு முனையம் ஒன்றை நிர்மாணித்தல், கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையம் வரை குழாய் கட்டமைப்பை அமைத்தல் ஆகியன ஒப்பந்தத்தில் அடங்குவதாக அமெரிக்க நிறுவனம் இன்று பகிரங்கப்படுத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையம் ஏற்கனவே 310 மெகாவாட் கொள்ளளவை கொண்டிருப்பதுடன், 2023ஆம் ஆண்டளவில் மேலதிகமாக 700 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.