ஸ்பெயின் நாட்டின் லா பல்மா பகுதியில் உள்ள எரிமலை வெடிப்பால் இதுவரை ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஸ்பெயினின், லா பல்மா பகுதியில் கேனரி தீவுகளில் உள்ள எரிமலை வெடித்து அதன் தீ குழம்பு தொடர்ந்தும் அதிகமாக வெளியேறுவதால் அங்கு மீட்புப்பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த எரிமலை கடைசியாகக் கடந்த 1971 ஆம் ஆண்டு வெடித்துள்ளது, அதனையடுத்து இப்போது புதிதாக வெடித்துச் சிதறி வருகிறது.
எரிமலை வெடிப்பதற்கு முன்னதாக 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
ஐம்பது ஆண்டுகளுக்குப் பின் முதன்முறை இந்த எரிமலை தற்பொழுது வெடித்துள்ளதால், ஆபத்து அதிகமாக இருக்கும் சூழலில், எரிமலைக் குழம்பை பார்வையிட சென்றவர்களை அதிகாரிகள் எச்சரித்து திருப்பியனுப்பினர்.