கணவன் உயிரிழந்த நிலையில், கணவனின் தம்பியை திருமணம் செய்து வரதட்சணை கொடுமையால் அந்த பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ் நாடு, மதுரௌ மாவட்டம் பாறைப்பட்டியை சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கும், காளவாசல் பகுதியை சேர்ந்த மாளவிகா என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவருக்கு திருமண சீதனமாக 120 பவுன் நகையும், 10 லட்ச ரூபாய் ரொக்க பணமும் பெண் வீட்டார் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து, திருமணமான 10 மாதத்திலேயே மாப்பிள்ளை மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இதனால், கைக்குழந்தையுடன் தவித்த மாளவிகா தனது பெற்றோர் வீட்டுக்கே திரும்ப சென்றுள்ளார். சீதனமாக கொடுத்த நகை மற்றும் பணத்தையும் பெண் வீட்டார் சண்டையிட்டு திரும்ப வாங்கியுள்ளார்.
இதன் பின்னர், டைப்ரைட்டிங் வகுப்பு சென்று வந்த, மாளவிகாவை, அடிக்கடி பேசி தொல்லை கொடுத்துள்ளார் கணவனின் தம்பி. தான் புதிய வாழ்க்கை தருவதாகவும் , அண்ணனை விட நன்றாக பார்த்துக் கொள்வதாகவும் ஆசைவார்த்தைக்கூறி சாமர்த்தியமாக காதலில் வீழ்த்தியுள்ளார்.
5 மாதம் இருவரும் பழகிய நிலையில், இரண்டாவதாக திருமணம் செய்ய மாளவிகா வீட்டில் கூற, எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பெற்றோருக்கு தெரியாமல் கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டனர்.
இதன்பின்னர், வீட்டுக்கு வந்த மாளவிகாவிடம் பெற்றோர்கள் பேசாமல் இருந்து வந்த நிலையில், சில மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மேலும், பிரகாஷிற்கு திருமண வரதட்சணையாக 80 சவரன் நகை, 5 லட்ச ரூபாய் ரொக்கத்தை மாளவிகாவின் பெற்றோர் மீண்டும் கொடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஆனால் அதனை ஏற்காமல் மீதமுள்ள நகையையும் பணத்தையும் வாங்கி வரச்சொல்லி மாளவிகாவை கொடுமைப்படுத்தி வந்தனர் என்று, அவரது பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர் பின்னர், மகள் சாவில் சந்தேகம் உள்ளதாகவும் மாளவிகாவின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து, புகாரின் பேரில் கந்துவட்டிக்காரனை போல வரதட்சணை வசூலிப்பதில் தீவிரம் காட்டிய காதல் மாப்பிள்ளை பிரகாஷையும் அவனது தந்தை தலையாரி பாண்டியையும் தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் போலீசார் கைது செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.