சமகால அரசாங்கத்தின் அமைச்சரவையில் பாரிய மாற்றம் ஏற்படவுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி வரையில் நாட்டை முழுமையாக திறப்பதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
நாடு முழுமையாக திறக்கப்பட்டவுடன் அமைச்சரவையில் பாரிய மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் அமைச்சரவை மாற்றத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடுமையான எதிர்ப்பு வெளியிட்டார். ஆனாலும் பின்னர் இணக்கம் வெளியிட்டுள்ளதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.