ஊரடங்கு சட்டம் நிறைவு செய்யப்பட்டு நாடு திறக்கப்பட்டதும் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்பட வேண்டும் என இலங்கையின் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல(Keheliya Rambukwella) கோரிக்கை விடுத்துள்ளார்.
முக்கியமாக புதிய இயல்பு நிலைமைக்கு ஏற்ற வகையில் நடந்து கொள்வதற்கு மக்கள் தயாராக வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவே சில வருடங்களுக்கு உலகளாவிய ரீதியில் யதார்த்தமாக இருக்கப் போகின்றது என்றும் சுகாதார அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.


















