இலங்கையிலிருந்து நியூசிலாந்து சென்ற பயணி ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
நியூசிலாந்தை சென்றடைந்த போது குறித்த நபருக்கு கோவிட் தொற்று உறுதியாகியிருந்தது என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இலங்கையர் கடந்த 11ம் திகதி நியூசிலாந்தை சென்றடைந்துள்ளார்.
இதேவேளைஇ கடந்த 22ம் திகதி நியூசிலாந்தை சென்றடைந்த பிரித்தானிய பிரஜை ஒருவருக்கும் கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
இந்த இருவரும் எல்லைப் பகுதியில் வைத்தே அடையாளம் காணப்பட்டதனால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.



















