சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் ஒரு பாலினத் திருமணத்திற்கு சுமார் மூன்றில் ஒரு வாக்குகள் கிடைத்துள்ளன.
இதற்கு 64 வீத ஆதரவு வாக்குகள் பதிவாகியுள்ளன. இதன்மூலம் மேற்கு ஐரோப்பாவில் ஒரு பாலினத் திருமணத்திற்கு அங்கீகாரம் அளிக்கும் கடைசி நாடுகளில் ஒன்றாக சுவிட்சர்லாந்து பதிவாகியுள்ளது.
எல்ஜிபிடி உரிமைகளில் இந்த கருத்தறியும் வாக்கெடுப்பு ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஒரு பாலின திருமணத்திற்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிப்பது பாரம்பரிய குடும்ப அமைப்பை குறை மதிப்புக்கு உட்படுத்தும் என்று பழமைவாத அரசியல் கட்சியினரும், தேவாலயம் செல்லும் வழக்கம் உடையவர்களும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.
சுவிட்சர்லாந்தில் 2007 ஆம் ஆண்டு தொடக்கம் ஒரு பாலின ஜோடிகள் தம்மை பதிவு செய்துகொள்ள அனுமதிக்கப்பட்டபோதும், அவர்கள் சில உரிமைகளை பெறுவதில் கட்டுப்பாடு இருந்து வந்தது.
இந்நிலையில் திருமணம் புரியும் அனுமதி மூலம் ஒரு பாலினத் தம்பதிகள் உறவினர் அல்லாத சிறுவர்களை தத்தெடுப்பதற்கு மற்றும் விந்து தானம் மூலம் குழந்தைகளை பெறுவதற்கு முடியுமாகும்.
ஒரு பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் அளிக்கும் உலகின் 30 ஆவது நாடான சுவிட்சர்லாந்து மாறியுள்ளது.
இதன்படி முதலாவது ஒரு பாலின திருமணம் அடுத்து ஆண்டு ஜூலை மாதத்தில் இடம்பெறும் என்று நீதி அமைச்சர் கரின் கெல்லர்-சட்டர் தெரிவித்துள்ளார்.