நம்மில் பலரும் வீட்டில் இடம் இல்லாத காரணத்தினால் துவைத்த துணியை வீட்டிலேயே காய வைக்கின்றனர். அவ்வாறு செய்வது ஆபத்து என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கிராமத்தில் வீடுகளுக்கு இடையே இடைவெளி இருக்கும் தருணத்தில், தற்போது நகர் புறங்களில் அவ்வாறான இடைவெளிகள் காணப்படாத காரணத்தில் பலரும் துணிகளை துவைத்து வீட்டிற்குள்ளே கயிறு கட்டி காய வைக்கின்றனர்.
வீட்டில் துணியை காய வைப்பதன் மூலம் கண்ணுக்கு தெரியாமல் பூஞ்சைகள், பாக்டீரியா நுண்ணுயிர்கள் ஈரப்பதம் இருக்கும் இடத்தில் அதிகம் இருக்கும்.
இதனால் வீட்டில் காயப்போடும் துணிகளில் அதிகம். இது நமது உடம்பிற்கு மிகவும் ஆபத்தானது என்று ஆய்வு கூறுகின்றது. ஈரப்பதமுள்ள காற்றில் இருக்கும் நுண்ணுயிர்கள் அதிகளவில் இருக்கும்.
நம் வீடுகளில் காயவைக்கும் துணிகளோடு இயல்பாக வந்து ஒட்டிக்கொள்ளும். இந்த ஆடையை நாம் அணியும் போது அவர்களுக்கு மூச்சு குழல் வழியாக நுண் கிருமிகள் உள்ளே சென்று ஆஸ்துமாவை உருவாக்கும்.
இந்த நுண்ணுயிர்களின் வளர்ச்சி வீட்டில் காயப்போடும் துணியில் 30% அதிகமாக இருப்பதாக ஆய்வு கூறுகின்றது. வெளியே நன்கு வெயிலில் காயவைக்கப்படும் துணிகளில் இவ்வாறான கிருமிகள் இல்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.