நாட்டில் மீண்டும் எரிவாயு கொள்கலன்களின் விலை அதிகரிக்க கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலையை 1,200 ரூபாவினால் உயர்த்த வேண்டும் என லிட்ரோ பாதுகாப்பு தேசிய ஒன்றியம் சமையல் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் லிட்ரோ நிறுவனத்தின் பணியாளர்கள் அடங்கிய குறித்த ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு மெட்ரிக் டன் எரிவாயு விலை சர்வதேச சந்தையில் 800 அமெரிக்க டொலராக உயர்வடைந்துள்ளது. மேலும் 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் கிரயம் 2ஆயிரத்து 21 ரூபாவாகும்.
இலங்கையில் தற்போது ஆயிரத்து 493 ரூபாவுகே 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு விற்பனை செய்யப்படுகின்றது.
அத்தோடு காப்பீட்டு தொகை உள்ளிட்ட ஏனைய அத்தியாவசிய சேவை, கப்பலுக்கான கட்டணங்களுக்காக 700 ரூபா செலவாகின்றது.
2 ஆயிரத்து 800 ரூபாவுக்கு லிட்ரோ சமையல் எரிவாயு விற்பனை செய்யப்பட வேண்டும் என லிட்ரோ பாதுகாப்பு தேசிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
கடந்த 9 மாதங்களாக சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்காமல் இருந்ததால் லிட்ரோ நிறுவனத்துக்கு 10 ஆயிரத்து 500 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.