சுவிட்சர்லாந்து நாட்டில் ரயிலில் வீழ்ந்து பல்கலைக்கழக மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் புலம் பெயர் தமிழர்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது .
கடந்த வெள்ளிக்கிழமை தேவைநிமிர்ந்தம் வெளியில் சென்ற குறித்த மாணவன் ரயிலில் வீழ்ந்து உயிரிழந்திருந்ததாக சுவிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ரயில் பாதையை கடந்த சமயம் விபத்து இடம் பெற்றதா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் அந் நாட்டு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் கூறப்படுகின்றது.
யாழ்ப்பணத்தை சொந்த இடமாக கொண்ட தற்போது சுவிஸ் Meilen மாநிலத்தில் வசித்து வரும் 22 வயதான பல்கலைக்கழக மாணவனே உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.




















