ஐ.நா மனித உரிமைகள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அமெரிக்கா சென்ற நிலையில் இன்றுக்காலை அவர் நாடு திரும்பியுள்ளார்.
இந்த விஜயத்தில் தனது பாரியார் அயோமா ராஜபக்ஷவுடன் அமெரிக்காவுக்குச் சென்றிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நியூயோர்க் உள்ளிட்ட இடங்களில் இடம்பெற்ற பல்வேறான நிகழ்வுகளில் பங்கேற்றார்.
அத்துடன் அவர் தன்னுடைய மகனின் மகளையும் (பேத்தி) பார்வையிட்டார். அது தொடர்பிலான புகைப்படத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தன்னுடைய பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
தனது பேத்தியான துலன்யாவை முதன்முறையாக சந்தித்ததாக அப்பதிவில் குறிப்பிட்டுள்ள நிலையில் குறித்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.




















