இன்று முதல் சிறைக் கைதிகளை பார்வையிடும் நடைமுறை மீண்டும் நடைமுறைக்கு வரவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று நிலை காரணமாக கடந்த ஓகஸ்ட் மாதம் 7ஆம் திகதி முதல் சிறைக் கைதிகளை பார்வையிடும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் கடந்த முதலாம் திகதியுடன் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் சுகாதார வழிக்காட்டல்களை கடைபிடித்து சிறைக்கைதிகளை பார்வையிட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது


















