நாடு முழுவதும் போலியான முறையில் தயாரிக்கப்பட்ட கொவிட் தடுப்பூசி அட்டைகளை பலர் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது.
அவ்வாறு பயன்படுத்தப்படும் அட்டை செல்லுப்படியாகுமா என்பது தொடர்பில் ஆராய்வதற்கு கொவிட் தடுப்பு செயலணி தீர்மானித்துள்ளது.
பிரதேச செயலக அலுவலகம், கிராம சேவர் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மட்டத்தில் இது தொடர்பில் ஆராய திட்டமிடப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் (Basil Rajapaksa) தலைமையில் கொவிட் தடுப்பு செயலணி கடந்த முதலாம் திகதி கூடியது.
இந்த கூட்டத்தின் போது, பொது இடங்களுக்கு செல்லும் போது தடுப்பூசி அட்டை பயன்படுத்துவதனை கட்டாயமாக்குவதற்கான தீர்மானத்தை மேலும் தாமதமாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி தொடர்பில் சரியான தரவுகளை தயாரிப்பதற்கு மேலும் போதுமான காலப்பகுதி அவசியமாக உள்ளதென சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியமையே இதற்கு காரணமாகும்