நாட்டின் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரியவருகிறது.
இந்த விடயத்தை மின்சக்தி அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பல பகுதிகளில் மின்சாரத்தடை ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரியவருகிறது.
முதலாம் இணைப்பு
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென் மாகாணம் முழுவதிலும் மேல் மாகாணத்தின் சில பகுதிகளிலும் இவ்வாறு மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக பன்னிப்பிட்டிய, ரத்மலானை, ஹொரணை, தெஹிவளை, மத்துகம ஆகிய பகுதிகளில் திடீரென மின் தடையானது ஏற்படுட்டுள்ளதாக கூறப்படுகிறது.