நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கொரோனா தடுப்பூசியை பெற்றுத்தர தற்போது தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதற்கேற்ப வருகிற திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை பல்கலைக்கழக மாணவர்களுக்கான தடுப்பூசி வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் 20 முதல் 30 வயதிற்குள்ளான பல்கலைக்கழக மாணவர்கள் அருகில் உள்ள பலக்லைக்கழகங்களில் தங்களுக்கான தடுப்பூசியை பெற்று கொள்ள முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.