தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் அமலா பால், சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள திருமண வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான மைனா படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் அமலாபால். இதையடுத்து விஜய், தனுஷ், விக்ரம், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான இவர், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார்.
அமலாபாலும், பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய்யும் கடந்த 2014-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து செய்து பிரிந்தனர். இதனைத் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார் அமலாபால்.
இந்நிலையில், நடிகை அமலா பாலின் தம்பி அபிஜித்திற்கு நேற்று திருமணம் நடைபெற்று உள்ளது. திருமணத்தில் எடுத்த வீடியோவை நடிகை அமலாபால் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து தனது சகோதரருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். வைரலாகி வரும் இந்த வீடியோவுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
View this post on Instagram