நீங்கள் வழிபாடு செய்வீர்கள் என்ற நம்பிக்கையில்தான் பித்ருலோகத்தில் இருந்து உங்கள் முன்னோர்கள், உங்கள் வீடு தேடி வருகிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.
மறைந்த முன்னோர்களுக்கு வருஷ திதி, தர்ப்பணங்கள் ஆகியவற்றை எவ்வாறு முறைப்படி செய்ய வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் அறிய வேண்டும். தர்ப்பை புல்லை வைத்து, அதில் பித்ருக்களை ஆவாஹனம் செய்து எள்ளும் நீரும் தருவதை தர்ப்பணம் என்பார்கள்.
இறந்தவர் தினம் தெரியவில்லை என்றால், மிருகசீரிடம் மற்றும் மக நட்சத்திரத்தில் தர்ப்பணம் செய்யலாம். தர்ப்பணம் கொடுக்கும் போது காய்கறிகள் 5 வகை (பூசணி, வாழைத்தண்டு தவிர்க்கவும்)யை தானமாக கொடுக்க வேண்டும். தரமான பச்சரிசி, 1 ரூபாய் காசு 11, கடலை பருப்பு, பயத்தம் பருப்பு, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய், புளி, உப்பு சிறிய பொட்டலம், மிளகு, சீரகம், கடுகு, வெந்தயம்.
ஆதரவற்றோர் இல்லத்திற்கு போர்வை, சோப், சர்க்கரை போன்று இன்னும் பயனுள்ள பொருட்களையும் தானமாக தரலாம்.