டெங்கு வைரஸ் ஏடிஸ் எஜிப்டி என்ற கொசுக்களால் பரப்பப்படுகிறது, அதிக காய்ச்சல் , தலைவலி, வாந்தி, தசை மற்றும் மூட்டுவலி,தோல் தடிப்புகள் போன்றவை இதன் முக்கிய அறிகுறிகள் ஆகும்.
இத்தகைய காய்ச்சல்களில் டெங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாக உள்ளது. எலிக்காய்ச்சல் போன்றவை ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
எனவே டெங்கு காய்ச்சலில் இருந்து நம்மை பாதுகாக்க கூடிய ஒரு சில முன்னேச்சரிக்கைகள் என்னென்ன என்பதை இங்கே பார்ப்போம்.
பின்பற்ற வேண்டிய முன்னேச்சரிக்கை என்ன?
நீர்த்தொட்டி, பால்கனி, மொட்டை மாடி மற்றும் பூந்தொட்டிகளின் கீழ்ப்பகுதியில் வைக்கப்படும் சின்னசின்ன தட்டுக்கள், பழைய டயர்கள், தேவையில்லை என தூக்கி எறியப்படும் சிரட்டைகள் போன்ற பொருட்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
கொசுவர்த்தி சுருள், மேட் போன்றவற்றால் சிலருக்கு ஒவ்வாமை உண்டாகும். அவர்கள் சிறிதளவு கிரீம் தடவி கொள்ளலாம். மேலும், படுக்கையில் கொசுவலை கட்டி பாதுகாப்பாக உறங்க வேண்டும்.
காலநிலை திடீரென மாறும்போது சாதாரண வைரஸ் காய்ச்சலும் இருக்கும். சளியோடு 2,3 நாள் நீடிக்கும். தீவிர காய்ச்சல், அதிகமான தலைவலி மற்றும் முதுகு வலி, உடலில் சிவப்பு நிற புள்ளிகள் போன்றவை 2 நாட்களுக்கு மேல் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.
டெங்கு நோய்க்கான பரிசோதனையில் ரத்தத்தில் உள்ள தட்டணுக்கள் எந்த அளவுக்கு உள்ளது என்பதை மருத்துவர்கள் கவனிப்பார்கள். தட்பவெப்பம் அடிக்கடி மாறும் சூழலில் எலிக்காய்ச்சல் பரவ வாய்ப்புகள் அதிகம்.
வெளி இடங்களுக்குச் சென்று வந்தால் கை, கால்களை நன்றாக சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.
சுத்தமான குடிநீரை அருந்த வேண்டும். நிறைய பழங்கள், காய்கறிகள் சாப்பிட வேண்டும். இதனால் நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும். ஐஸ் சேர்த்த ஜூஸ், ஐஸ்கிரீம் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது