சல்மான் கான் தொகுத்து வழங்கி வரும் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் திடீரென நேற்றைய தினத்தில் கலேபரம் நடைபெற்றுள்ளது.
அக்டோபர் 2ம் திகதி தொடங்கிய இந்த சீசனிலும் மற்ற சீசன்களை போலவே பிரச்சினைக்கு குறைவில்லாமல் சென்று கொண்டிருக்கின்றது.
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ப்ரதிக் செஹஜ்பல் சக போட்டியாளர்கள் அனைவரிடமும் கோபப்பட்டு சண்டை போடுகிறார். இந்நிலையில் நேற்றைய டாஸ்கின்போது ஜெய் பனுஷாலியிடம் மோதினார் ப்ரதிக். இதனால் கோபம் அடைந்த ஜெய் கேமரா முன்பு வந்து நின்று அந்த ஆள் என்னை தொட்டால் அவ்வளவு தான் என்றார்.
இதையடுத்து பிற போட்டியாளர்கள் ப்ரதிக் மற்றும் ஜெய்யை சமாதானம் செய்தார்கள். ஜெய் மட்டும் அல்ல உமர் ரியாஸுடனும் சண்டை போட்டார் ப்ரதிக். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் யாரையும் அவர் சும்மாவிடுவதாக இல்லை.
ப்ரிதக் செய்த கலாட்டாவால் கடுப்பான சக போட்டியாளர்கள் ஜன்னல் கண்ணாடி மற்றும் வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தினார்கள்.
இந்நிலையில் வார இறுதி நாளில் சல்மான்கான் நிச்சயம் அனைவரையும் வச்சி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.