அமைச்சர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) கென்யாவிற்கு விஜயம் செய்துள்ளார்.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவொன்றை இட்டுள்ளார். அதில் கென்யாவின் நைரோபிக்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக வந்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், இரு சமூகங்களுக்கிடையிலான நட்புறவை மேலும் வளர்க்கவும் பல பயனுள்ள கூட்டங்களில் பங்கேற்க விரும்புவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.