பால் மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து ஆகியவற்றுக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண (Lasantha Alagiyawanna) இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கும், அமைச்சர்களுக்கும் இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், முறையற்ற விதத்தில் பொருட்களுக்கான விலையை அதிகரிக்க அனுமதிக்க வேண்டாம் என ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.