எதிர்வரும் சிறுபோகத்தில் நெல் கொள்வனவுக்காக சலுகை வட்டியில் கடன் வழங்கும் திட்டமொன்றை முன்னெடுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன் பிரகாரம் சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்களுக்கு அரச வங்கிகள் ஊடாக சலுகை வட்டி வீதத்தில் அடகுக் கடன் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன் மூலம் சிறுபோக நெல் பயிர்ச்செய்கையாளர்களுக்கு நியாயமான விலை கிடைப்பதுடன், சிறு அளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் தங்கள் தொழிலை விருத்தி செய்து கொள்ளவும் வழியேற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.