இலங்கையில் வருடாந்த பிறப்பு வீதம் கணிசமான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
அதன்படி, இலங்கையின் வருடாந்த பிறப்பு வீதம் 350,000 இலிருந்து 250,000 ஆக குறைந்துள்ளதாக விசேட வைத்திய நிபுணர் குறிப்பிட்டார்.
அது மாத்திரமின்றி புற்றுநோய், சர்க்கரை நோய் போன்ற நோய்களாலும் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே தற்போதைய சூழ்நிலையில் குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் விசேட வைத்தியர் தீபால் பெரேரா வலியுறுத்தினார்.