சீனாவின், சினோஃபார்ம் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுக்கொண்டவர்களுக்கு மட்டுமே மூன்றாவது அளவு தடுப்பூசி பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பூஸ்டர் மூன்றாவது அளவு தடுப்பூசி இயக்கம், அநேகமாக அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னரே தீர்மானிக்கப்பட்டபடி 60 வயதுக்கு மேற்பட்ட மற்றும் நோயுற்றவர்களுக்கு இதன்போது முன்னுரிமை அளிக்கப்படும்.
பின்னர், பூஸ்டர் மூன்றாவது அளவு, 20 அகவைக்கு மேல் உள்ளவர்களுக்கும் கொடுக்கப்படும்.
இதற்கிடையில், 20 அகவை மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது அளவை வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகளின் துணை இயக்குனர், வைத்தியர் ஹேமந்த ஹேரத் (Dr. Hemantha Herath) தெரிவித்தார்.