மருத்துவர்கள் தங்கள் வேலையை செய்வதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும். அத்துடன் அரசியல்வாதிகள் அரசியல்வாதிகளின் வேலையைச் செய்ய வேண்டும்.இந்த ஒழுங்கு முறை மீறப்பட்டால், சிரமங்களுக்கு உள்ளாவது நாட்டு மக்களே என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில், எதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ளும் திறன் அரசாங்கத்திற்கு இருக்க வேண்டும். எனினும் கடுமையான பேரிடராக மாறிய கோவிட் கட்டுப்படுத்தலை அரசாங்கம் மறந்துவிட்டு நடை பாதை திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற ‘எதிர்க்கட்சியிலிருந்து ஓர் மூச்சு நிகழ்ச்சித் திட்டத்தில் ஆனமடுவ வைத்தியசாலைக்கு அத்தியாவசிய மரூந்துப்பொருட்களை வழங்கும் போது அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.
நாடு இன்று பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்களே கடும் பாதிப்பை எதிர்நோக்குகின்றனர். எனினும் அரசாங்கத்திடம் உரிய செயற்திட்டங்கள் இல்லை என சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.