ஆப்கானிஸ்தானின் குந்தூஸ் மாகாணத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. குந்தூஸ் மாகாணத்தில் உள்ள மசூதி ஒன்றில் இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது தொழுகையில் ஈடுபட்டிருந்த பலர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேறிய பிறகு அங்கு நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதலுக்கு இதுவரையிலும் எந்தவொரு அமைப்பும் உரிமை கோராத நிலையில், ஐஎஸ் அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
இந்நிலையில், தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.