கோவிட் பெருந்தொற்று காரணமாக இதுவரையில் நாட்டில் 67 சிறுவர் மரணங்கள் பதிவாகியுள்ளன.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் குடும்ப சுகாதார செயலணியின் நிபுணத்துவ மருத்துவர் கபில ஜயரட்ன (Dr. Kapila Jayaratne) இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
இவ்வாறு உயிரிழந்த 67 சிறுவர்களில் 13 சிறுவர்கள் வீடுகளிலேயே உயிரிழந்துள்ளனர். ஏனைய சிறுவர்களில் 95 வீதமானவர்கள் இறுதி நேரத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏதேனும் நோய் நிலைமைகள் ஏற்பட்டால் பிள்ளைக்கு காய்ச்சல், இருமல் அல்லது வேறும் உபாதைகள் ஏற்பட்டால் தகுதியுடைய மருத்துவர் ஒருவரின் ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும்.
அதில் திருப்தி இல்லையென்றால் அருகாமையில் இருக்கும் வைத்தியசாலைக்கு செல்லவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.