இலங்கைத் தமிழர் அகதிகள் முகாம்களில் இருந்து 64 பேர் சட்டவிரோதமாக தப்பிச் சென்றுள்ளமையானது பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இவர்கள் படகு மூலமாக, தென்னாப்பிரிக்காவுக்கு தப்பிச் செல்ல முயன்று மாலைதீவு அருகே சர்வதேச பொலிஸாரிடம் சிக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து தமிழக கியூ பிரிவு பொலிஸாா் விசாரணை நடத்தி வருகின்றனர். மாலைதீவு மற்றும் மொரீஷியஸ் நாடுகளுக்கு இடையிலான கடற்பரப்பில் மோசமான வானிலை காரணமாக இவர்கள் சென்ற படகு சர்வதேச பொலிஸாரிடம் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.