பால் மா, திரவ பெட்ரோலிய எரிவாயு, கோதுமை மா மற்றும் சீமெந்து ஆகியவற்றுக்கான விலை திருத்தங்கள் நாளை நிர்ணயிக்கப்படும் என்று நுகர்வோர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், 12.5 கிலோ எல்பி எரிவாயு சிலிண்டரின் விலையை 1,000 ரூபாவாலும், சீமெந்தின் விலையை 180 ரூபாவாலும், கோதுமை மாவின் விலையை 20 ரூபாவாலும் அதிகரிப்க்க இறக்குமதியாளர்கள் கோரியுள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதியாளர்களின் கோரிக்கைகளுக்கு அஅமைச்சு ஒப்புக்கொள்ளாததால், திருத்தப்பட்ட விலையை வெளியிடுவதில் தாமதமேற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.