அமெரிக்காவின் ஓக்லஹோமா மாநிலத்தில் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டு 2 வயது சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தவிப்பதை தாயார் ஒருவர் கண்ணீருடன் வெளிப்படுத்தியுள்ளார்.
ஓக்லஹோமா மாநிலத்தில் வசிக்கும் Makayla Hunziker என்பவரே தமது 2 வயது மகன் கிரேசன் தொடர்பில் கவலையை வெளிப்படுத்தியுள்ளார். கிரேசன் பிறந்து ஒரு மாத காலத்திலேயே மருத்துவமனைக்கும் குடியிருப்புக்குமாக அலையும் நிலை ஏற்பட்டது என கூறும் அவர்,
தமது மகன் பலமுறை அறுவை சிகிச்சைக்கு உள்ளானதாகவும் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு ஜூலை மாதம் வாழ்க்கையில் மிக நெருக்கடியான கட்டத்தை சந்தித்ததாக கூறும் அவர், தமது மகனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது என்றார்.
குடும்பத்தில் யாருக்குமே கொரோனா உறுதி செய்யப்படாத நிலையில், தமது மகனுக்கு எப்படி நோய் தொற்றியது என தெரியவில்லை என்றார் செவிலியரான Makayla.
இதனிடையே, சிறுவனின் நிலை மிகவும் மோசமடைய, அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றியுள்ளனர். மூச்சுவிட முடியாமல் திணறிய சிறுவனுக்கு பின்னர் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 9ம் திகதி வரையில் சிறுவன் உயிர் பிழைப்பானா என்ற கேள்வி மட்டுமே இருந்ததாக மருத்துவமனை செவிலியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது கொரோனாவில் இருந்து மீண்டு குடியிருப்புக்கு திரும்பிய நிலையில், அதன் தாக்கத்தில் இருந்து மெதுவாக மீண்டு வருவதாக Makayla தெரிவித்துள்ளார்.