புத்தளத்தில் அனுமதியின்றி திருமண நிகழ்வு நடத்திய நபர்கள் தனிமைப்படுத்த சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகத்தின் சுகாதார பரிசோதகர்களின் சங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தனிமைப்படுத்தப்பட்டவர்களில் திருமணம் செய்த தம்பதியும் உள்ளடங்குவதாக தெரியவந்துள்ளது.
மதுரங்குளிய – கொத்தன்தீவு பிரதேச வீட்டில் திருமண நிகழ்வு ஒன்று நடத்தப்படுவதாக கடந்த 8ஆம் திகதி பிற்பகல் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய விசாரணை நடவடிக்கைகளுக்காக சுகாதார பரிசோதகர்கள் அந்த வீட்டிற்கு சென்றுள்ளனர்.
திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் அதிகமானோர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
வீட்டில் இருந்தவர்களுக்கு கடுமையாக எச்சரித்த சுகாதார பரிசோதகர்கள் அவர்களை அந்த வீட்டிலேயே தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டனர்.