கென்யாவிற்கு பிரத்தியேக விமானமொன்றில் பயணம் மேற்கொண்டதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
தாம் விசேட விமானமொன்றின் மூலம் அண்மையில் கென்யாவிற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்ததாக சமூக ஊடகங்களில் வெளியான தகவல்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்றை முழுமையாக பதிவு செய்து அதில் நாமல் கென்யா விஜயத்தை மேற்கொண்டதாக சில செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், கென்ய அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில் அதிகாரபூர்வ விஜயமொன்றையே தாம் மேற்கொண்டுள்ளதாகவும் நாமல் தெரிவித்துள்ளார்.